போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 இந்தோ கனடியர்கள் – பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்

accident
police drug

கனடாவின் இரண்டு மேற்கு மாகாணங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை மத்திய அமைப்பு மற்றும் சட்ட அமலாக்க துறை கைது செய்தது.போதைப்பொருள் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் 9 நபர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகள் சுமார் 18 மாதங்களுக்கு நீடித்தது. கல்கரி காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையின்படி கனடா முழுவதும் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை குறி வைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஸ்கட்டூன் போலீஸ் சேவை, ராயல் கனடியன் மவுண்டன்ட்,சிபிஎஸ் பிரிவுகள் ,கனடா பார்டர் சர்வீசஸ் ஏஜென்சி மற்றும் கனடியன் ஏர் டிரான்ஸ்போர்ட் செக்யூரிட்டி அத்தாரிட்டி போன்ற பல சட்ட அமைப்புகளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு உள்ள போட்டி போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் மோதலில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை சம்பவம் மற்றும் 20க்கும் மேற்பட்ட வன்முறைகள் போன்ற நிகழ்வுகளுக்கு இரண்டு குழுக்களும் காரணமாக உள்ளன என்று கல்கரி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமந்தீப் சாகு,ரவ்னீத் கில்,ஜர்மன்ஜித் ,ஜஸ்கரன் சித்து, பிரப்ஜ்யோத்,மற்றும் ஜஸ்மின் தலிவால் போன்ற 9 இந்தோ கனடியர்கள் கல்கரியில் கைது செய்யப்பட்டனர்.போதைப்பொருள் கடத்தல் மற்றும் கும்பலினால் ஏற்படும் வன்முறைகள் போன்றவற்றில் ஏற்படும் ஆபத்திலிருந்து கல்கேரி மக்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.