கனடாவில் பணத்தை பறிகொடுத்த இந்திய மாணவி – பணத்தை திருப்பி வழங்காததால் பெற்றோர்கள் மன அழுத்தம்

indian student study permit canada college

இந்தியாவைச் சேர்ந்த அமன்ப்ரீத் கவுரின் பெற்றோர்கள் தங்களது மகள் கனடாவிற்கு சென்று படிக்க வேண்டும் என்பதற்காக அதிக உழைப்பினால் தங்களால் முடிந்த பணத்தை சேர்த்து வைத்தனர்.

மாணவி அமன்பிரீத் கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள எம் கல்லூரியில் வணிக நிர்வாக துறையை தேர்ந்தெடுத்து படிப்பில் சேர்ந்தார். ஒரு ஆண்டுக்கு ஏறத்தாழ $15000 டாலர்களுக்கும் அதிகமாக அவரது படிப்பிற்கு செலவானது. பெற்றோர் சேர்த்து வைத்த பணத்தை படிப்பிற்காக செலவிட்ட இந்திய மாணவிக்கு சிக்கல் ஏற்பட்டது.

கனடாவில் படிப்பு அனுமதி மாணவிக்கு அளிக்கப்படாததால் அவரால் கனடாவிற்கு செல்ல முடியவில்லை. குளிர்காலத்தின் கல்லூரி ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் படிப்பு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நேரடி கற்றல் முறையில் சிக்கல் ஏற்பட்டதால் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் வகுப்பில் மெய்நிகர் வாயிலாக பாடங்களை கற்றார். தற்பொழுது வரை அவருக்கு படிப்பு அனுமதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத காரணத்தினால் கல்லூரியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்தார்.

மாணவி படிப்பிற்காக கல்லூரியில் கட்டிய தொகையில் $7300 டாலர்களை அவரிடம் திருப்பிக் கொடுக்க இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்று கூறியது. ஆனால் ஆறு மாதங்களைக் கடந்தும் செலுத்திய பணத்தில் பாதியளவு பணத்தைக் கூட கல்லூரி நிர்வாகம் திருப்பி செலுத்தவில்லை என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மாணவி கல்லூரியில் கட்டிய தொகை திரும்பி வராததால் பெற்றோர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்தார். கனடாவின் கூட்டாட்சி அரசாங்கம் சர்வதேச நாடுகளிலிருந்து கனடாவிற்கு படிப்பதற்காக வரும் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்