கனடாவில் செவிலியர்களாக பணிபுரியும் அனைவரும் அதிக மன அழுத்தத்தில் உள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல்!

Female nurse on phone in PACU of hospital
A nurse works in a hospital. (Dana Neely/Getty Images)

ஒன்ராறியோ மாகாணத்தில் செவிலியர்களாக பணிபுரியும் அனைவரும் அதிக மன அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வைரஸ் தொற்று பாதிப்பினால் பல்வேறு துறைகளுக்கு ஓய்வு கிடைத்த நிலையிலும் தங்களுக்கு ஓய்வின்றி பணி இருந்ததால் மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா முதல் அலை பரவலின் போது நீண்டநேர செவிலியர் பணியில் ஈடுபட்டதால் சுமார் 3300 செவிலியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ செவிலியர் குழுமம் அறிவித்துள்ளது.

ஓ என் ஏ குழுமத்தின் தலைமை செயலர் விக்கி, செவிலியர்கள் அனைவரும் தாங்கள் போர்க்களத்தில் இருப்பது போல உணர்வதாக தன்னிடம் கூறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரத்தின் படி 60 சதவீத செவிலியர்கள் நீண்ட நேரமாக பணி களத்தில் செயல் பட்டவர்களுக்கு பி டி எஸ் டி அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த காலநிலையை செவிலியர்கள் பற்றாக்குறை மருத்துவமனை இடவசதி பற்றாக்குறை ஆகியவை அதிகமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.