கனடாவிலுள்ள இந்தியர்களுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் குழு – முரளிதரன்

khalistan canad india

கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கனடாவிலுள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களின் குழு செயல்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் கனடிய அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக ஈடுபட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வி முரளிதரன் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் கனடாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் அடிப்படைக் கொள்கையை இரண்டு அரசாங்கங்களும் அங்கீகரித்துள்ளன என்று ராஜ்யசபாவில் கூறினார்.

இந்தியாவிற்கும் கனடாவுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கு கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் கடுமையாக உழைத்துள்ளனர்.மேலும் இந்தியாவுடன் அன்பான உணர்ச்சி அடிப்படையிலான பிணைப்பை கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்

கனடாவிலுள்ள காலிஸ்தான் குழு தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் மூலமாக இந்தியாவிற்கு எதிரான உணர்வுகளை பரப்புவதாகவும் அவர் கூறினார். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் தொடர்பான கவலையை பூர்த்திசெய்ய இந்திய அரசாங்கம் கனடிய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் கூறினார்.

கனடாவிலுள்ள இந்தியர்களுடன் அரசாங்கம் நெருங்கிய தொடர்பை பேணுவதாகவும் ,பிணைப்பை வலுப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்வது முக்கிய கொள்கை என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.