கனடாவின் முக்கிய மாகாணத்தில் அமலுக்கு வந்த புதிய தடை! குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் நீடிக்கும் அபாயம்!

Jason Kenney
Alberta Premier Jason Kenney and Quebec Premier Francois Legault leave a press conference in Ottawa on Friday, Sept. 18, 2020. THE CANADIAN PRESS/Sean Kilpatrick

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பொது வெளியில் மக்கள் கூட தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்து மாகாண முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒரே நாளில் 1,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,028 ஆக அதிகரித்துள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு மாகாண அரசு நிர்வாகம் முடிவு செய்தது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, பொது வெளியில் மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பதாக மாகாண முதல்வர்  Jason Kenney அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டாலும், அல்பெர்ட்டா மாகாணத்தில தனிமையில் வாழ்பவர்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள 2 நபர்களுடன் கூட இருக்க அனுமதியளிக்கப்படும் என மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் Tyler Shandro தெளிவுப்படுத்தினார்.

இந்த கட்டுப்பாடுகளுடன் சேர்ந்து மாகாண அரசு சார்பில், பிற நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தேவைப்படும் இடங்களில் கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் அனைத்து உட்புற நிகழ்வுகளின் போதும், பொது இடங்களிலும் கட்டாயமாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நூலகங்கள், அருங்காட்சியகங்கள், கேசினோக்கள் மற்றும் பிற பொழுது போக்கு மையங்கள் டிசம்பர் 13 முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மாகாணம் முழுவதும் குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் வரை நடைமுறையில் இருக்கும் என மாகாண முதல்வர் Jason Kenney கூறினார்.

இதையும் படியுங்க: கனடாவில் மற்றொரு பரபரப்பு! வேற்றுகிரகவாசிகள் படையெடுப்பின் அறிகுறி காட்டப்பட்டுள்ளதா?

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.