ஒன்ராறியோவில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தலாம் – பல கட்ட ஆய்வுக்கு பிறகு வெளியான முடிவு!

pregnant

ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று தடுப்பூசி மருந்து விநியோகத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஒன்ராரியோ மாகாணத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கு ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

40 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி மருந்து செலுத்திக் கொள்ளலாம் என்று வயது வரம்பினை குறைத்து விநியோகத்தின் விரிவாக்கம் விரைவாக செயல்படுத்தப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வுகளுக்குப் பிறகு அறிவித்துள்ளது.

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு covid-19 வைரஸ் தொடர்பான அறிகுறிகள் எழுச்சி பெறுகின்ற நிலையில் தடுப்பூசி மருந்து தேவைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம் கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி மருந்து செலுத்தும் செயல்முறை குறித்து தகவலை வெளியிட்டுள்ளது.

அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி மருந்து செலுத்த இயலும் இதன் மூலம் தொற்று பரவலில் இருந்து கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக இருக்க இயலும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் குழுக்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி மருந்து குறித்த விழிப்புணர்வை அறிவித்து வருகின்றன.

இந்த வார தொடக்கத்திலேயே சுகாதாரத்துறை அமைச்சர் கிரிஸ்டின் எல்லியட், கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கான மருத்துவர்களிடம் சோதனை செய்து கொண்டு, பரிசோதனை கடிதம் தயார் செய்து, அதன் பின்பு மாகாண அழைப்பு சேவை எண்ணிற்கு தொடர்பு கொண்டு அதன் மூலம் தடுப்பூசி மருந்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்