வயது தடையில்லை -93 வயதிலும் துவண்டு போகாத துள்ளல் செய்த சாதனை

93 year old quebec
93 year old quebec montreal old man record broke race credit cbc news

ஒரு மனிதன் தனது வாழ்வில் சாதிப்பதற்கு வயது தடையில்லை என்பதற்கு உலகம் முழுவதிலுமுள்ள ஒரு சில மூத்த வயதுடையவர்கள் உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர். வயது என்பது எண்ணளவு மட்டுமே என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்தும் விதமாக கனடாவில் 93 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற மருத்துவர் போலசோ ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்துள்ளார்.

லண்டனில் உள்ள Sprinkbank பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற கேனியோ போலசோ ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை 36 நிமிடங்கள் 30 நொடிகளில் கடந்து கனடிய சாதனையை முறியடித்துள்ளார். அவரது முந்தைய கனடிய மாஸ்டர்கள் சாதனையானது ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை 37 நிமிடங்கள் 41 நொடிகளில் கடந்ததாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கனடாவின் கியூபெக்கில் உள்ள McGill பல்கலைக்கழகத்தில் உள் மருத்துவத்தை கற்பித்து வந்த கேணியோ ஓய்வு பெற்ற மருத்துவர் ஆவார். தனது 6வது வயதில் ஓடத் தொடங்கிய இவர் தனது எண்பதாவது வயதில் முழங்கால்களுக்கு ஓய்வு கொடுத்தார்.

113 பவுண்டுகள் எடையும், 5 அடி 6 அங்குலம் உயரமுடைய இவர் மீண்டும் தனது 90 ஆவது வயதில் சுறுசுறுப்புடனும்,தன்னம்பிக்கையுடனும் ஓடுவதற்கு தயாரானார். கேனியோவின் மனைவி அவருக்காக வழங்கிய முழங்கால் பிரேஸ்களின் துணைகொண்டு ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதாகவும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பந்தயத்திற்கு பிறகு மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக கூறினார். சாதனையை அடைவதற்கு 10 முதல் 20 ஆண்டு காலங்கள் முறையான பயிற்சி மற்றும் நேர்மறை சிந்தனைகள் தன்னை வலுப்படுத்திய.தாகவும் அவர் கூறினார்