‘இந்தியர்களை கவனித்துக் கொண்ட கனடா பிரதமருக்கு எனது நன்றிகள்’ – மோடி

canada tamil news

கொரோனா நெருக்கடி காலத்தில் இந்தியர்களை கவனித்து கொண்ட கனடா பிரதமருக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடா நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் மனைவி இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குபின் குணமடைந்தார்.

கனடாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – முழு விவரம் இங்கே

இதனிடையே கனடா நாட்டில் இந்தியாவை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்களை நன்கு கவனித்து கொண்டதற்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவித்து இருப்பதாவது, “நெருக்கடிநிலையின்போது இந்தியர்களை நன்கு கவனித்து கொண்டதற்கு நன்றி. கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு இருநாடுகளின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்தோனேஷியாவிற்கு இந்தியா மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதற்கு நன்றி தெரிவித்து இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி நெருக்கடியான கால கட்டத்தில் சுகாதாரம் பொருளாதார சவால்களை சமாளி்க்க இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

காலில் ஊதா நிற கொப்புளம் வந்தால் கொரோனா – எச்சரிக்கும் கனடா நிபுணர்கள்