உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய தலைவர்களை ஒன்றிணைக்க கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு – ரஷ்யாவிற்கு மேலும் பல நெருக்கடிகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு பலமுறை கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்பொழுது ரஷ்யாவின் இரக்கமற்ற படையெடுப்பு மற்றும் தாக்குதலை சமாளிக்க ஐரோப்பிய தலைவர்கள் ஜனநாயக நாடுகளாக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒருமாத கால போர் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே covid-19 வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும் பொழுது ரஷ்யாவின் படையெடுப்பு பொருளாதாரத்திற்கு மீண்டும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ ,அதிகரித்து வரும் பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய ஜனநாயக நாடுகளாக அவர் அழைத்தார். உக்ரைன் மீது பயங்கர தாக்குதலை நடத்தி வரும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அதை செய்யவேண்டும் என்று பிரதமர் கூறினார்.

உக்ரைன் மீதான புட்டினின் தாக்குதல் அனைத்து ஜனநாயக நாடுகளின் தூண்களாக இருக்கும் மதிப்புகள் மீது ஏற்படுத்தும் தாக்குதலாகும்.உக்ரேனியர்களுக்கு மட்டுமின்றி நம் அனைவருக்கும் இந்த மதிப்புகள் எவ்வளவு முக்கியமானவை என்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்