குப்பை வர்த்தகத்தில் குளறுபடி – கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றுமதி

plastic wastes export philipines canada

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு மோசமான விளைவுகள் உண்டாகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளின் உலகளாவிய ஏற்றுமதியை குறைப்பதற்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு ஓராண்டில் கனடாவின் பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதி 13% சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கழிவுகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றது.

பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றுமதி செய்வதில் மெத்தன போக்கு தென்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault தெரிவித்துள்ளார். மேலும் இந்த விதமான அணுகுமுறையை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இவற்றை தெளிவாகவும் சிறப்பாகவும் செய்வதற்கு விரும்புவதாகவும் ஒரு பேட்டியில் அவர் கூறினார்.

பிளாஸ்டிக் கழிவு ஏற்றுமதியில் கனடாவின் அதிர்ச்சிகரமான வரலாறு 2019 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மறுசுழற்சி செய்வதற்காக பிளாஸ்டிக் என்று தவறாக பெயரிடப்பட்ட குப்பைகளை ஏற்றுமதி செய்வது பிலிப்பைன்ஸ் உடன் ராஜதந்திரம் மோதலுக்கு வழிவகுத்தது. இது உலகளாவிய குப்பை வர்த்தகத்தில் கவனத்தை ஈர்த்தது .

வளரும் நாடுகள் அல்லது செல்வந்த நாடுகளுக்கு செல்லும் கொள்கலன் கப்பல்களில் பெரும்பாலான குப்பைகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை பெரும்பாலும் நிலப்பரப்புகளில் எரிக்கப்பட்டன. இது சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அசுத்தமான பிளாஸ்டிக் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு கனடா எல்லை சேவை அமைப்புடன் இணைந்து கனடிய அரசாங்கம் செயல்படுவதாக கனடா கூறியுள்ளது