கனடாவில் பெட்ரோல் விலை வீழ்ச்சி – 2009 ஆம் ஆண்டிற்கு திரும்பிச் செல்வதாக கருத்து

personal debt
Canada

Omicron எனப்படும் புதிய covid-19 வைரஸ் மாறுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை அன்று கச்சா எண்ணெய் விலை சரிந்தது. வீரியம் மிக்க Omicron வைரஸ் மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பறந்து வரும் விமானங்களை கனடிய அரசாங்கம் தடை செய்துள்ளது.

எரிசக்திகளின் தேசிய சராசரி விலை லிட்டருக்கு $1.32 டாலர்கள் குறையும் என்றும் ஆனால் வாரத்தின் நடுப்பகுதியில் விலை உயரத் தொடங்கும் என்றும் எரிசக்தி பொருள்களின் கனடிய தலைவர் Dan Mc Teague கூறினார்.

ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் பெட்ரோல் விலையில் விரைவான வீழ்ச்சியை கனடியர்கள் காண வேண்டும் என்று கூறப்படுகிறது. சுமார் 13 ஆண்டுகளாக இவ்வளவு விரைவான பெட்ரோல் விலை சரிவினை கனடியர்கள் பார்த்திருக்க முடியாது.

கடந்த வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் ஒப்பந்தம் 13.1 சதவீதம் அதாவது 10.4 அமெரிக்க டாலர்கள் சரிந்து லிட்டருக்கு 68.15 அமெரிக்க டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ள பெட்ரோல் விலை சரிவு 2009ஆம் ஆண்டிற்கு திரும்பிச் செல்வதை குறிப்பதாக தலைவர் Dan Mc Teague பேட்டியில் கூறினார்

நன்றி தெரிவிக்கும் விடுமுறை காரணமாக அமெரிக்க பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால் பெட்ரோல் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கனடியர்கள் தங்களது வாகனங்களில் எரிசக்திகளை நிரப்பிக் கொள்வதற்கு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை சிறந்த நாட்கள் ஆகும் என்று Mc Teague கூறினார்.

அத்தியாவசியம் மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள் வான்கூவர் தீவு, சி டு ஸ்கை பகுதி ,லோயர் மெயின் லேண்ட் மற்றும் சன்சைன் கோஸ்ட் போன்ற பகுதிகளில் உள்ள எரிவாயு நிலையத்தில் 30 லிட்டர் வரை மட்டுமே வாங்க முடியும் என்று தகவல்கள் கூறுகின்றன