கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் பணியில் கனடாவின் அபார முயற்சி!

peter singer
peter singer canada corona

கனடாவில் covid-19 தொற்று மூன்றாவது அலையாக பரவி வருகிறது. Covid-19 வைரஸ் தொற்றினால் கனடா பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.

கனடாவின் தற்போதைய நிலையை குறித்து மருத்துவர் பீட்டர் சிங்கர் “கனடா மிகவும் மோசமான நிலையை எதிர் கொண்டுள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இவர் உலக சுகாதார நிறுவனத்தின் பணியாளர் நியமனத்துக்கான சிறப்பு ஆலோசகர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கனடா அரசாங்கம் தற்பொழுது போதுமான அளவு தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொண்டு தக்கவைத்துள்ளது. மேலும் தடுப்பூசி மருந்து வினியோகிக்கும் செயல்முறைகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் கனடா covid-19 வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்தி வைரஸ் தொற்று பரவலை தடுத்து பாதுகாப்பான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்பொழுது உலக சுகாதார நிறுவனத்தின் சிக்கல்களைப் பற்றியும் தனது கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.

அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி தொடர்பான குழப்பத்திற்கு கனடா வைத்த முற்றுப்புள்ளி!

அதாவது தடுப்பூசி மருந்துகள் சமமான முறையில் வழங்கப்படுவது உலக சுகாதார நிறுவனத்துக்கு இக்கட்டான பிரச்சனையை தருவதாகவும் பீட்டர் சிங்கர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டாலும் தடுப்பூசி மருந்து விநியோகித்தல் சீரற்ற நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது அதிக வருவாய் உள்ள நாடுகளில் தடுப்பூசி மருந்துகளுக்கான பாதுகாப்பு என்பது, அதிக வருவாய் இல்லாத நாடுகளில் உள்ள அளவை விட ஐந்து மடங்கு அதிகம் என்று கருத்துகள் வெளியாகி வருவதால் இந்த நிலைமை மிக மோசமான நிலைமை என்றும் அவர் கூறியுள்ளார்.