போலியான பிசிஆர் சான்றிதழ்களுடன் இனி கனடாவுக்குள் நுழைய முடியாது – கடுமையாக்கப்படும் நடவடிக்கை!

corona
Vaccine Corona

கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் Covid-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவிற்கு திரும்பும் அல்லது வருகை புரியும் பயணிகளுக்கு கொரானா வைரஸ் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனடாவிற்கு பயணிக்கும் பயணிகள் எதிர்மறையான முடிவுகளை பெற்றிருந்தால் மட்டுமே கனடாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேவேளையில் போலியான கொரானா வைரஸ் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பித்து கனடாவிற்குள் சுமார் முப்பது பேர் நுழைவதற்கு முயற்சி செய்து வந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பாக விதிகளை மீறி கனடாவிற்குள் நுழைய முயன்ற 30 பேரினை அடையாளம் கண்டுள்ளதாக எல்லையோர சேவை முகவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கனடா எல்லை சேவை முகவர் அமைச்சர் ஒருவர் உரையாடலின்போது ” ஜனவரி 7 மற்றும் மார்ச் 24 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் சுமார் 10 பேர் போலி பரிசோதனை சான்றிதழ் முடிவுகளுடன் கனடாவிற்குள் நுழைய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 24ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட நாட்களில் போலியான பிசிஆர் சான்றிதழ்களுடன் தரைவழி மார்க்கமாக ஏறத்தாள 20 பேர் கனடாவிற்குள் நுழைய முயன்றது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று போலி பிசிஆர் சான்றிதழ்களுடன் கனடாவிற்குள் நுழைய முயற்சிப்பவர்களுக்கு தண்டனையாக பெரிய தொகை அபராதம் ஆகவும், கடுமையான நடவடிக்கையும் அறிவிக்கப்படலாம் என்று அறிவித்துள்ளார்.