கனடாவிற்குள் நுழைய பயணிகளுக்கு Pcr பரிசோதனை அவசியம் இல்லை – விடுமுறையை எதிர்நோக்கியிருக்கும் பயணிகளுக்கு இனிய செய்தி

Air-India-787-Dreamlin

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எதிர்வரும் பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி முதல் PCR மூலக்கூறு பரிசோதனை இல்லாமல் கனடாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. PCR பரிசோதனைக்கு பதிலாக மலிவான மற்றும் விரைவான ஆன்டிஜன் பரிசோதனையை தேர்வு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாத விடுமுறையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பல பயணிகளுக்கு இனிய அறிவிப்பாக வந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தடுப்பூசி மருந்து போட்டு கொண்டவர்கள் சுதந்திரமாக பயணிப்பதற்காக மேலும் பல கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன.

விரைவான ஆன்டிஜன் பரிசோதனைகளை சுகாதார பராமரிப்பு மற்றும் ஆய்வகங்கள் மூலம் நிர்வகிக்கப் படவேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினார் .புதிய விதிமுறைகள் அமெரிக்காவிலுள்ள விதிமுறைகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளன. இது மக்கள் தங்களைத் தாங்களை விரைவான ஆன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ளத் தூண்டுகிறது

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலர் அரிதாக PCR மூலக்கூறு பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் போது தனிமைப் படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

குடும்பங்கள் கனடாவிற்கு பயணிப்பதை எளிதாக்க 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ,தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்கள் உடன் பயணம் செய்தால் கனடாவை வந்தடைந்த பிறகு இரண்டு வாரங்களுக்கு பள்ளி மற்றும் பிற பொது இடங்களில் இருந்து தனிமைப் படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை