டொராண்டோவில் 4 திருமண நிகழ்வுகளில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஆபத்து!

Whitchurch-Stouffville
Wedding with corona virus restrictions. (Ivanova Tanja/Shutterstock)

கனடாவில் கடந்த வார இறுதியில், டொராண்டோ மார்க்கம் மற்றும் Town of Whitchurch-Stouffville-லில் நடந்த ஒரு பெரிய திருமணத்தில் கலந்து கொண்ட 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக யார்க் பிராந்தியத்தில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யார்க் பிராந்திய பொது சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில்,  ஆகஸ்ட் 28 மற்றும் 29 க்கு இடையில் மார்க்கம், Whitchurch-Stouffville மற்றும் டொராண்டோவில் தொடர்ச்சியான திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட நபர்கள் செப்டம்பர் 12 சனிக்கிழமை வரை தங்களை சுயதனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு கொரோனா அறிகுறி உண்டாகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பின்வரும் இடங்களில் திருமண கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்:

Friday, Aug. 28 — Private residence in the Town of Whitchurch-Stouffville.
Friday, Aug. 28 — Rexdale Singh Sabha Religious Centre at 47 Baywood Road in Toronto.
Friday, Aug. 28 — Lakshmi Narayamandir Temple at 1 Morningview Trail in Toronto.
Saturday, Aug. 29 — Private residence in Markham.

அந்த அறிக்கையின்படி, யார்க் பிராந்தியம் முழுவதிலும் இருந்து மொத்தம் 23 பேருக்கு கொரோனா இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட வழக்குகளின் நெருங்கிய தொடர்புகளைப் பின்தொடர்ந்து வருவதாகவும், அவர்களை 14 நாட்களுக்கு சுய-தனிமைப்படுத்தவும் சோதனைக்கு செல்லவும் உத்தரவிட்டதாக யார்க் பிராந்திய பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

தற்போது அறிகுறிகளை அனுபவிக்கும் நபர்கள் உடனடியாக சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் COVID-19 மதிப்பீட்டு மையத்தில் மதிப்பீடு மற்றும் சோதனை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: கை சுத்திகரிப்பான் வடிவில் குழந்தைகளுக்கு வரப்போகும் ஆபத்து! ஹெல்த் கனடா எச்சரிக்கை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.