நிம்மதி தெரிவித்துள்ள வணிக உரிமையாளர்கள் – ஊழியர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது போராட்டக்காரர்களின் முற்றுகை

Covid-19 ஆணைக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்ததால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள், நெரிசலான தெருக்கள் போன்ற பல்வேறு சிரமங்களின் காரணத்தால் பெரும்பான்மையான வணிகங்கள் பாதிப்படைந்தன.

டவுன்டவுனில் உள்ள வணிக உரிமையாளர்கள் போராட்டத்தின் விளைவாக வணிகங்களை மூடி வைத்திருந்தனர்.தற்பொழுது போராட்டம் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால் இந்த வாரம் மீண்டும் வணிகங்களை திறக்கலாம் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

போராட்டத்தின்போது தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக வணிகங்களை மூட வேண்டி இருந்தது. தற்பொழுது வணிகங்களை மீண்டும் திறப்பதால் நிம்மதியாக இருப்பதாகவும் உற்சாகமாக உணர்வதாகவும் மெட்ரோபொலிட்டன் Brasserie -ன் பங்குதாரர் சாரா தெரிவித்துள்ளார்.

Covid-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகளின் போது பெரும்பாலும் உணவகங்கள் திறந்து இருந்தது. ஆனால் போராட்டக்காரர்களின் முற்றுகையிடலின் முதல் இரண்டு வாரங்களில் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக அதை அணுக முடியாததால் மூட வேண்டி இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் முற்றுகை வணிகங்களுக்கு பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஊழியர்களுக்கும் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக வணிக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தினம் மற்றும் காதலர் தினம் ஆகிய இரண்டு நாட்களிலும் வணிகங்களுக்கு அதிகளவிலான கிடைக்கும். ஆனால் எதிர்ப்பாளர்களின் முற்றுகையினால் இந்த இரண்டு நாட்களிலும் வணிகங்கள் மூடப்பட்டது பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக வணிக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்