ஒட்டாவாவில் களமிறங்கும் ராணுவம் – மிகமிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று கூறிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Justin Trudeau
canada says PM Justin Trudeau

கனடாவில் லிபரல் அரசாங்கத்தின் covid-19 ஆணைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் தலைநகர் ஒட்டாவாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான லாரிகள் உடன் ஓட்டுனர்கள் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி வளைத்துள்ளனர். மேலும் சில போராட்டக்காரர்கள் அங்குள்ள தேசிய வீரர்களின் சிலைகளையும் சேதப்படுத்தி நாச காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

லிபரல் கட்சியின் தலைவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைநகரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் covid-19 ஆணைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ராணுவப் படையை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை என்று பிரதமர் கூறினார்.

எல்லை தாண்டிய லாரி ஓட்டுநர்களுக்கான covid-19 தடுப்பூசி ஆணையை எதிர்த்து ஒரு வாரத்திற்கும் மேலாக ஒட்டாவாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்காண போராட்டக்காரர்கள் கடந்த வார இறுதியில் நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வேண்டுமென்றே போக்குவரத்தை தடுத்தனர். இதனால் உள்ளூர் வாசிகள் சிரமம் அடைந்தனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர காவல் துறையின் தலைவர் ராணுவ படையை அழைக்கலாம் என்று இந்த வாரத் தொடக்கத்தில் கூறினார். 250க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இன்னும் அங்கேயே இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கனடிய மக்கள் ஈடுபட்டுள்ள போராட்டத்தில் ராணுவத்தை நிறுத்துவதற்கு முன்பு மிகமிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.