Covid-19 பரிசோதனையில் நேர்மறை முடிவுகள் – ஒன்டாரியோ

covid-vaccine
canada covid-vaccine test

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் கட்டுப்பாடுகளுடன் நிறுவனங்கள் மற்றும் வணிகம் போன்றவை இயங்குகின்றன. ஒன்ராரியோ மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களில் 300க்கும் மேற்பட்ட Covid-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் ஏழு நாட்களுக்கான Covid-19 இவற்றின் சராசரி எண்ணிக்கை ஆனது 200ஐ கடந்துள்ளது என புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

ஒன்டாரியோ சுகாதார அமைப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அன்று 168 covid-19 தொற்றுகள் பதிவாகியதாகவும் மற்றும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி 164 Covid-19 பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை Covid-19 தொற்று 218 ஆக இருந்தது. தற்பொழுது குறைந்து காணப்பட்டாலும் கடந்த வாரம் Covid-19 வைரஸ் தொற்றின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் பொழுது சற்று அதிகம் என்று குறிப்பிடப்படுகிறது. கடந்த வாரம் 129 தொற்றுகள் மட்டுமே பதிவாகி இருந்தன.

ஒன்டாரியோ மாகாணத்தின் இந்த வாரத்திற்கான 7 நாள் சராசரி Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை 201 ஆகும். ஆனால் கடந்த வார Covid-19 வைரஸ் தொற்று ஏழு நாள் சராசரி 157 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்

ஒன்டாரியோவில் ஒரே நாளில் 11,515 Covid-19 பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பரிசோதனையில் நேர்மறையான முடிவுகள் பெற்ற எண்ணிக்கை சதவீதம் 1.3% ஆகும். கடந்த வாரம் நேர்மறை சதவீதம் ஒன்றாக இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களில் Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக பதிவாகியுள்ளது

டொரன்டோ 45
யாக் 23
பீல் 22