ஒன்ராரியோ மாகாணத்தில் எடுக்கப்பட்ட Covid-19 பரிசோதனைகள் – வெளிவந்த பரிசோதனை முடிவு

COVID19
COVID19 Canada

ஒன்ராரியோ மாகாணத்தில் Covid-19 பரிசோதனைகள் :

ஒன்டாரியோ மாகாணத்தில் புதிதாக 130 covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. பதிவாகியுள்ள covid-19 வைரஸ் தொற்றுக்கள் ஏழுநாள் கூட்டுச்சராசரி மாறாமல் அதே நிலையில் உள்ளது. கடந்த வாரம் மாகாணத்தில் 127 covid-19 வைரஸ் தொற்று பதிவாகி இருந்ததாகவும் செவ்வாய்க்கிழமை சற்று அதிகரித்துள்ளதாகவும் மாகாணசுகாதார அதிகாரிகள்கூறினார்.

ஒன்ராரியோ மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 192 covid-19 வைரஸ் தொற்றுக்களும், சனிக்கிழமை 170 வைரஸ் தொற்றுக்கள், ஞாயிற்றுக்கிழமை 172 வைரஸ் தொற்றுகளும் பதிவாகியுள்ளன .கடந்த வாரத்திற்கான ஏழு நாள் சராசரி 152 ஆக இருந்தது. தற்பொழுது 7 நாள் சராசரி 157 ஆக பதிவாகியுள்ளது. கடந்த வாரத்திலிருந்து தற்போது 7 நாள் சராசரி சற்று அதிகரித்து உள்ளது.

மாகாணத்தில் ஒருநாளில் மட்டும் Covid-19 வைரஸ் தொற்றினால் 5 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே Covid-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9321 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 158 பேர் Covid-19 வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். தற்போது ஆயிரத்து 395 பேர் Covid-19 வைரஸ் தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒன்டாரியோ மாகாணம் நேற்று ஒரு நாள் மட்டும் 13644 covid-19 பரிசோதனைகளை செய்துள்ளது. பெரும்பாலான பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்தது. இருப்பினும் ஒரு சதவீதம் நேர்மறையான முடிவு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு 0.9% மட்டுமே நேர்மறை பரிசோதனை முடிவுகள் வந்தது என்று மாகாணத்தின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.