செய்திகள்

முதல் அலையை விட கொரோனா இரண்டாவது அலை எவ்வளவு மோசமானது? ஒன்ராறியோ முதல்வர் டக் போர்டு எச்சரிக்கை!

Doug Ford
Ontario Premier Doug Ford says according to health officials the province is now officially in the second wave of the coronavirus pandemic.

ஒன்ராறியோ மாகாணம் ஒரு பெரிய கோவிட் -19 கட்டத்தை எதிர்த்து போராடுகையில், முதல்வர் ஃபோர்டு (Doug Ford) தலைமையிலான அரசாங்கம் எல்லாம் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறுகிறது.

இரண்டாவது அலை பரவியிருப்பதை முதல்வர் ஒப்புக் கொண்டார். மேலும் தொற்றுநோய்கள் விரைவாக அதிகரிக்கும் இந்த நேரத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் 700 புதிய கொரோனா தொற்றுநோய்கள் பதிவாகிய பின்னர், எங்களுக்கு இரண்டாவது அலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்று, இன்னும் தெரியாது என ஃபோர்டு திங்களன்று கூறினார்.

உண்மை என்னவென்றால், அது நமக்கு ஒரு அலை போல இருக்கப்போகிறதா? இல்லை சுனாமியாக மாறப்போகிறதா என்பதை நம் கூட்டு நடவடிக்கைகள் தீர்மானிக்கும் என்றார்.

ஃபோர்டு அரசாங்கம் அதன் இலையதிர் கால ஆயத்தத் திட்டத்திற்கு கூடுதல் விவரங்களை அறிவித்தது.

52 மில்லியன் டாலருக்கு  அதிகமான முதலீடு உட்பட 3,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல்வர் போர்டு கூறியது போல, இரண்டாவது அலைகளில் இருக்கிறோம். கேள்வி என்னவென்றால், இது எந்த வகை இரண்டாவது அலையாக இருக்கும் என்பதை டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் விவரித்துள்ளார்.

இப்போதே, அந்த அலை மூழ்கடிப்பது போல் தெரிகிறது.  இது எங்கள் அமைப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இரண்டாவது அலைக்கு, இந்த நேரத்தில் நாங்கள் சிறப்பாக தயாராக இருக்கிறோம். மாகாண முதல்வர் கூறியது போல், இதைத் தடுத்து முன்னேறிச் செல்ல விரும்புகிறோம் என்றார்.

இதையும் படியுங்க: ஆபத்தான மருந்து! பொதுமக்களுக்கு டொராண்டோ பொது சுகாதாரத்துறை விடுக்கும் எச்சரிக்கை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Related posts

கனடாவில் ஒன்றாரியோ மாகாண கடற்கரைகள் மூடப்படுகிறதா.? முதல்வர் டக் ஃபோர்ட் வெளியிட்ட அறிவிப்பு!

Editor

கனடாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,693 ஆக அதிகரிப்பு!

Editor

கனடாவில் ஒரு இலட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு! உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,254 ஆக அதிகரிப்பு!

Editor