காலநிலை எச்சரிக்கை! ஒன்டாரியோ மாகாண பாடசாலைகள் திறக்கும் நேரத்தில் கனடா எதிர்கொள்ளும் சிக்கல்!

snowfall
File photo. THE CANADIAN PRESS/ Tijana Martin Leave A Comment

கனடாவின் ஒன்டாரியோ மாகாண பாடசாலைகளைத் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனடாவின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அவசரகால ஊரடங்கு ஆனது நிறைவிற்கு வருகின்றது. அதனால் மக்கள் தரப்பில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்புயல் மற்றும் அதிகமான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்திற்கு தடைகள் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு நிறைவானது மேலும் நீட்டிக்கப்படும் என்று சில தரப்பு மக்கள் கூறி வருகின்றனர்.

இன்று 27 தொகுதிகளில் பாடசாலைகள் மற்றும் கல்வி வளாகங்கள் திறக்கப் படுவதாக உள்ளது.

பள்ளி வளாகங்களுக்கு செல்பவர்கள் முறையான covid-19 பரிசோதனை மற்றும் தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொண்டு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இனி வருகின்ற வாரங்களில் ஊரடங்கு மற்றும் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை போன்ற கட்டுப்பாடுகளில் சிறிது சிறிதாக தளர்வுகள் கொண்டுவரப்படும் என்றும் கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் கனடாவின் 27 தொகுதிகளில் திறக்கப்பட இருக்கும் வளாகங்களில் கல்வி ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் அறிவுரை வழிமுறை போன்றவற்றை ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்க: கனடாவில் காதலர் தினத்தில் ஒரே நேரத்தில் இணையாக இரு பெண்கள் செய்த சாதனை!