ஒன்டாரியோ மக்கள் பிறந்த மாதங்களின் அடிப்படையில் QR குறியீடுகளை பதிவிறக்கம் செய்யலாம் – முதல்வர் ஜான் டோரி

restaurant food
mayor

ஒன்ராரியோ மாகாணத்தில் தகுதியுள்ள கனடியர்கள் அனைவருக்கும் கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகின்றன. மக்களின் தடுப்பூசி நிலையை எளிதாக கண்டறிவதற்கு மாகாண அரசாங்கம் QR குறியீடுகளை அறிமுகப்படுத்தியது. தடுப்பூசி சான்றிதழ் வழிமுறை பல வணிகங்களில் உள்ள ஊழியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

தற்பொழுது மாகாண அரசாங்கம் QR குறியீடுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதற்கு எளிதான திட்டத்தை உருவாக்கியுள்ளது. மக்கள் தங்களது தடுப்பூசி சான்றிதழுக்கான QR குறியீட்டை மூன்று நாட்களுக்குள் பதிவிறக்கம் செய்ய முடியும்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய முதல் நான்கு மாதங்களில் பிறந்தநாள் கொண்ட குடியிருப்பாளர்கள் தங்களது QR குறியீட்டை வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்யலாம். அக்டோபர் மாதம் 16ஆம் தேதி, மே, ஜூன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிறந்தநாள் கொண்டவர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆண்டின் இறுதி நான்கு மாதங்களில் பிறந்தநாள் கொண்டவர்கள் அக்டோபர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை QR குறியீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
The verify ontario app உதவியுடன் ஒன்டாரியோ குடியிருப்பாளர்கள் தங்களது QR குறியீடுகளை ஸ்கேன் செய்து கொள்ளலாம் என்று மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தடுப்பூசி சான்றிதழுக்கான புதிய QR குறியீடு திட்டம் வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே எளிமையான செயல் முறைகளாக அமையும் என்று முதல்வர் ஜான் டோரி கூறினார்.

QR குறியீடுகள் பெரும்பான்மையான மக்களின் ஸ்மார்ட்போன்களில் இருப்பதால் ,இந்த திட்டம் பெரிய வித்தியாசத்தை மாகாணத்தில் ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.