யாருக்கெல்லாம் முன்னுரிமை? டொராண்டோவில் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்து முன்பதிவு செய்ய அனுமதி!

Ontario residents

டொரன்டோவில் உடல்நலம் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்து முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து தடுப்பூசி மருந்து முன்பதிவு ஆரம்பமாகிறது. மேலும் மாகாணம் முதுமை அடைந்தவர்கள் நீரிழிவினால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் அரிவாள் செல் நோய் போன்றவற்றால் பாதிப்படைந்தவர்கள் தடுப்பூசி மருந்து பெற்றுக்கொள்வதற்குமுன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

முதல் கட்ட தடுப்பூசி மருந்துகளை மளிகை அங்காடிகளில் பணிபுரியும் வேலையாட்கள், உணவகம் போக்குவரத்து துறைகளில் பணிபுரிபவர்கள் இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்து உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எதிர்வரும் வியாழக்கிழமை அன்று அரசாங்கம் 40 வயது மேற்பட்டவர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி மருந்துகள் முன்பதிவு செய்வதற்கு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

வருகின்ற வாரங்களில் மில்லியன் கணக்கிலான தடுப்பூசி மருந்துகள் கனடாவிற்கு இறக்குமதி செய்ய இருப்பதால் தடுப்பூசி மருந்துகள் வினியோகம் செய்யும் பணியினை விரிவாக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மே மாத இறுதிக்குள் 65 சதவீத இளம் வயதினர் முதல் கட்ட தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொள்வார்கள் என்று ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வீட்டிலிருந்தே பணிபுரிய முடியாதவர்கள் போன்றவர்களும் முதல் கட்ட தடுப்பூசி மருந்து பெற்றுக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்து உள்ளது.