இனி அச்சம் வேண்டாம்! கனடாவில் தடுப்பூசி இரத்தம் உறைதலால் பாதிக்கப்பட்ட முதல் நபர் பரிபூரண குணம்!

CORONAVIRUS-CANADA

கனடாவிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி மருந்துகள் விரைவாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்பொழுது ஒன்ராரியோ மாகாணத்தில் அஸ்திரா ஜனகா தடுப்பூசி மருந்து செலுத்தி கொண்ட இரண்டு பேருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஒன்டாரியோ மாகாணத்தின் முதன்மை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் டேவிட் வில்லியம்ஸ் 60 வயதுடைய நபருக்கு முதல் அளவு அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்ட பின்பு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஒன்டாரியோ மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்றவை எங்களது முதன்மை கடமையாகும் என்று வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

ரத்தம் உறைதல் ஏற்பட்ட அந்த நபருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது உடல் நலத்துடன் வீட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Covid-19 வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகின்ற நிலையில் தடுப்பூசி மருந்துகள் மக்களைப் பாதுகாக்க பெரிதும் உதவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஹெல்த் கனடா அமைப்பு மூலம் அனைத்து மாகாணங்களிலும் விநியோகிக்கப்பட்டு வரும் தடுப்பூசி மருந்துகள் அனைத்தும் பாதுகாப்பானதாக உள்ளது என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

168 புதிய பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த வைரஸ் தொற்று இங்கிலாந்தில் உருவாகிய வைரஸ் திரிபுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒன்டாரியோ மாகாணத்தின் மக்கள் அனைவரும் தடுப்பூசி மருந்துகளை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.