Covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் அதிகரிப்பு – ஒன்டாரியோ மாகாணம்

covid19
ctv

ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் தினசரி அதிகரித்துக்கொண்டே வருகிறது. Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துஞாயிற்றுக்கிழமை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.722 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்பொழுது covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகின்றன என்று புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

Covid-19 வைரஸ் தொற்றுக்கான ஏழு நாள் சராசரி எண்ணிக்கை நேற்று 534 ஆகவும், இன்று 564 ஆகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி 774 covid-19 வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியிருந்தது உயர்ந்த எண்ணிக்கையாக கருதப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்பு கடந்த சனிக்கிழமை covid-19 வைரஸ் தொற்றினால் 689 பேரும், வெள்ளிக்கிழமை 650 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

மாகாண ஆய்வகங்களில், 23,075 மாதிரிகளை சோதனை செய்தன.அவற்றில் குறைந்தபட்சமாக 3.2% நேர்மறை பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன. இந்த விகிதம் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு பதிவாகியுள்ள அதிக நேர்மறையான முடிவுகளாகும்.

Covid-19 தடுப்பு ஊசி மருந்து covid-19 வைரஸ் தொற்றின் அபாயத்திலிருந்து பாதுகாப்பாக வைக்கிறது. ஒன்ராரியோ மாகாணத்தில் ஓரளவு தடுப்பூசி பெற்றுக்கொண்ட மற்றும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்களின் சதவிகிதம் 34 ஆகும்.

4,989 covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் மாகாணத்தில் தற்பொழுது வரை பதிவாகியிருக்கின்றன. 9,453 உயிரிழப்புகள் மாகாணத்தில் உறுதிப்படுத்த பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.5,45,070 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து பின்பு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.