ஒன்ராரியோ மாகாணத்தில் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தடுப்பூசி மருந்து பெற வேண்டும்

test of covid
covid soeed test

ஒன்ராரியோ மாகாணத்தில் நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் போன்ற அனைவரும் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு மாகாணத்தில் தடுப்பூசி மருந்து போட்டுக்கொள்ளாத ஊழியர்களை விரைவான covid-19 பரிசோதனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஒன்டாரியோ மாகாணத்தில் தற்பொழுது covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக நீண்ட கால பராமரிப்பு ஊழியர்கள் தடுப்பூசி மருந்து செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சில பராமரிப்பு இல்லங்களில் குறைந்த அளவு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விகிதம் உள்ள காரணத்தால் பராமரிப்பு ஊழியர்களுக்கு தடுப்பூசி மருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று நீண்ட கால பராமரிப்பு அமைச்சர் ராட் பிலிப்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாகாணத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவான covid-19 தடுப்பூசி மருந்து விகிதங்களுடன் பெரும்பான்மையான ஊழியர்கள் இருப்பதாக ஒன்டாரியோவின் பராமரிப்பு இல்லங்கள் குறித்த தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.டெல்டா மாறுபாடு தீவிரத்தின் மத்தியில் இந்த சதவீதம் ஆனது ஏற்கத்தக்கவை அல்ல என்று பிலிப்ஸ் கூறினார்.

ஒன்ராறியோவின் பராமரிப்பு இல்லங்களில் 43 ஊழியர்களுக்கும், 53 குடியிருப்பாளர்களுக்கும் covid-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒன்டாரியோ முழுவதும் 19 நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

Covid-19 வைரஸ் தொற்றினால் 4000க்கும் மேற்பட்ட நீண்ட கால பராமரிப்பு குடியிருப்பாளர்கள் மரணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்றின் தொடக்கத்திலிருந்து முதல் இரண்டு அலைகளின் மோசமான தாக்கம் மற்றும் தடுப்பூசி மருந்து பரவலாக கிடைக்காத போது இவ்வாறு நிகழ்ந்துள்ளன.