ஒன்ராறியோவில் அவசரநிலை அறிவித்தார் முதல்வர் டக் ஃபோர்டு – போராட்டக்காரர்களின் சட்டவிரோதமான செயல்

Doug Ford
Ontario Premier Doug Ford says according to health officials the province is now officially in the second wave of the coronavirus pandemic.

ஒன்ராரியோ மாகாணத்தில் ஒரு முக்கிய எல்லைப்பகுதியை கடப்பதில் மிகுந்த இடையூறுகளை ஏற்படுத்திய Freedom Convoy போராட்டங்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தற்பொழுது அரசாங்கத்தால் உடனடியாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் covid-19 ஆணையை எதிர்த்து ஒன்ராறியோவின் முக்கிய பகுதிகளான Windsor மற்றும் Detroit இடையே உள்ள தூதர் பாலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு இடையூறுகள் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் உடனடியாக அவசர நிலையை அறிவித்தார்.

குயின்ஸ் பூங்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க நடவடிக்கைகளை எடுப்பதால் காவல் துறைக்கு ஆதரவளிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வர் ஃபோர்டு கூறினார்.மேலும் அவசரநிலை உத்தரவு தற்காலிகமானதாக இருந்தாலும்,உத்தரவுகளை சட்டத்தில் நிரந்தரமாக்கும் புதிய சட்டத்தை முன்னோக்கி கொண்டு வருவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக கூறினார்.

மக்களுக்கான சேவைகள் மற்றும் போக்குவரத்து போன்றவற்றை நிறுத்துவது சட்ட விரோதமான செயலாகும். இது போன்ற நடவடிக்கைகளுக்கு தண்டனை அளிக்கப்படும். சர்வதேச எல்லை, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் ,ரயில்வே மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதும் இதில் அடங்கும். பொது போக்குவரத்து, நடைபாதைகள் போன்ற அத்தியாவசிய இயக்கத்தை பாதுகாப்பதும் உள்ளடங்கும் என்று போர்டு கூறினார்