அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைகள் – அதிருப்தி தெரிவித்த ஒண்டாரியோ மக்கள்

ford

ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய கருத்துகணிப்பில் ,கடந்த ஆண்டு ஒன்டாரியோவில் covid-19 தாக்குதலின்போது தொடர்ச்சியான தொற்று நோய் பரவல் அலைகளால் covid-19 வைரஸ் தொற்றை கையாளுவதில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளான பொது சுகாதார கட்டுப்பாடுகள், தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்கள் போன்ற covid-19 தொடர்பான பலதரப்பட்ட பிரச்சனைகள் பற்றிய பொதுமக்களின் கருத்தை மதிப்பிடும் வகையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

இந்த கணக்கெடுப்பிற்கு பொது நிதியில் பணம் செலுத்தப்பட்டது. மேலும் மாகாண அமைச்சரவை அலுவலகத்தால் நியமிக்கப்பட்டது. 35 சாவடிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Covid-19 வைரஸ் தொற்றின் ஒவ்வொரு அலையிலும் அரசாங்கத்திடமிருந்து ஆதரவு குறைந்து விட்டதாக கணக்கெடுப்பின் ஒட்டுமொத்த முடிவுகளில் தெரியவந்துள்ளது. மே மாத தொடக்கத்தில் பொதுமக்களின் அதிருப்தி உச்சத்தை எட்டி உள்ளதாக கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

கணக்கெடுப்பில் 51% சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் covid-19 வைரஸ் தொற்றின் அலையை கையாளுவதில் மிகவும் மோசமாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர். 19% சதவீதத்தினர் மட்டுமே சிறந்த செயல் என்று கூறுகின்றனர் .

Covid-19 வைரஸ் தொற்றின் தொடர்ச்சியான அலைகளில் மாகாண அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை கருத்துக்கணிப்பு தெளிவாக வெளியிட்டுள்ளது