ஒன்டாரியோ – சாலையில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட பாதசாரிகள்

accident london ontario

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் சாலைகள் ஒன்றுசேரும் பெரிய சந்திப்பில் வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியது. செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற விபத்தில் பாதசாரிகள் மீது வாகனம் மோதியுள்ளது.

ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தினால் பாதசாரிகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு நபர்களில் ஒருவருக்கு இதயம் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மிகப்பெரிய சாலை சந்திப்பில் வாகனம் விபத்துக்குள்ளாகி சாலை ஓரத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக Middlesex London paramedic service மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் மிராண்டா போத்வெல் தெரிவித்தார்.

பல கார்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது நகரின் தெற்கு முனையில் உள்ள வொண்டர்லந்து சாலைக்கு அருகில் வாகனம் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனம் பாதசாரிகள் மீது மோதியதாக முதல்கட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றன .பின்னர் வாகனம் மோதியதில் பல கார்களும் தாக்கப்பட்டன என்று தகவல்கள் கிடைத்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.காவல்துறையினர் சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து காரணமாக அப்பகுதியின் பல வீதிகளும் மூடப்படும் என்று அறிவித்தனர். மேலும் விபத்து ஏற்பட்ட சாலை பகுதியை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்