ஒன்டாரியோவில் வணிக உரிமையாளர்கள் மகிழ்ச்சி – வாடிக்கையாளர்களிடம் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் இல்லை

vaccine certificate

ஒன்ராரியோ மாகாணத்தின் வணிகங்களில் கட்டாய covid-19 தடுப்பூசி அவசியமில்லை என்று மாகாண அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மாகாணத்திலுள்ள வணிக உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தலைநகர் ஒட்டாவாவில் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நேரத்தை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக வணிக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மாகாணத்தின் தடுப்பூசி சான்றிதழ் அமைப்பு மார்ச் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தடுப்பூசி சான்றிதழ் கட்டுப்பாடுகளை நீக்கியதால் பெரும்பான்மையான வணிகங்கள் மகிழ்ச்சி அடைந்தன. சில வணிகங்கள் மாகாண அரசாங்கத்தின் அறிவிப்புகள் இல்லாவிட்டாலும் தடுப்பூசி போடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரத்தை ஒதுக்குவதற்கு திட்டமிட்டுள்ளன.

மாகாணத்திலுள்ள மற்ற வணிகங்கள் கலப்பின அணுகுமுறையை தேர்ந்தெடுத்துள்ளன.தடுப்பூசி போடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறது. பெரும்பாலான நாட்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வணிகங்கள் திறந்திருக்கும்.

Covid-19 தடுப்பூசியின் இரண்டு தவணை தடுப்பூசி மருந்துகளை பெற்றவர்கள் வியாழக்கிழமைகளில் கலந்து கொள்ள முடியும் என்று Hintonburg Public House சமீபத்தில் அறிவித்தது.தடுப்பூசி போடப்பட்ட மற்றும் போடப்படாத வாடிக்கையாளர்களுக்கு உணவளிப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்று ஒன்ராரியோ மாகாணத்தின் வணிக உரிமையாளர்கள் கூறுகின்றனர். Covid-19 கட்டுப்பாடுகள் காரணமாக வீழ்ச்சியை நோக்கிச் சென்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்க வழி பிறந்து விட்டதாக வணிக உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்