இன்று முதல் இலவச RT பரிசோதனை கருவி வினியோகம் – ஒன்டாரியோ அதிகாரிகள் ஆலோசனை

vaccine

கனடாவில் இன்று முதல் 2300க்கும் மேற்பட்ட மருந்தகங்கள், மளிகை கடைகள் போன்றவற்றில் உடனடியாக covid-19 பரிசோதனை செய்யும் கருவிகள் மக்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்யும் மாகாணத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு இலவச covid-19 Rapid Antigen சோதனைகளை வழங்க தொடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

பொதுமக்களுக்கு கடைகள் மற்றும் மருந்தகங்கள் உதவியுடன் விரைவான பரிசோதனையை வழங்குவதன் மூலம் ஒவ்வொரு வாரமும் 5.5 மில்லியன் பரிசோதனைகளை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில கடைகள் வீட்டிற்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்யும் கருவிகளை வழங்கும். மற்றவை ஆன்லைன் ஆர்டர் செய்யும் முறையில் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வீட்டிற்கும் 5 பரிசோதனை கருவிகள் அடங்கிய கிட் கிடைக்குமென்று மாகாணம் தெரிவித்துள்ளது.

40 மில்லியனுக்கும் அதிகமான விரைவான ஆன்டிஜன் பரிசோதனைகளை எட்டு வாரங்களுக்கு இந்த கடைகளுக்கு விநியோகிப்பதற்கு மாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எட்டு வாரத்திற்கு பின்னர் இந்த திட்டத்தை மாகாண அரசாங்கம் தொடர உள்ளதா என்பது உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர்.

21 உயர் சமூக முன்னணி நிறுவனங்களிலும், 2385 மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளிலும் சோதனைகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக முன்னுரிமை உள்ள சுற்றுபுறங்களில் சோதனைகள் விநியோகிக்கப்படும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.