ஒன்ராறியோவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மருத்துவமனை – டக் போர்டு மற்றும் கிறிஸ்டின் எலியட்

Ontario ford and christine eliot
Ontario ford and christine eliot

ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்டு மற்றும் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் ஆகிய இருவரும் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட டிரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸ் மிசிசாகா மருத்துவமனையை மீண்டும் புதுப்பித்து கட்டுமான பணி செய்வதற்கான திட்டங்கள் குறித்த தகவல்களை இன்று வழங்கினர்.

இரண்டு மருத்துவமனைகள் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மிசிசாகாவில் உள்ள மருத்துவமனை ஒன்றும் மற்றொன்று எட்டோபிக்கோக்கில் விரிவுபடுத்த உள்ளதாக கடந்த மாதம் பொருளாதார அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.மிசிசாகாவில் நடைபெற்ற செய்தி மாநாட்டில் மருத்துவமனை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டன.

மிசிசாகாவில் இரண்டு மருத்துவமனைகளை டிரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸ் நடத்தி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் மிசிசாகா மருத்துவமனை மற்றும் கிரெடிட் வேலி மருத்துவமனை ஆகிய இரண்டு தளங்களும் செயல்பட்டு வருகின்றன.

டிரில்லியம் ஹெல்த் பார்ட்னர்சின் தலைவரும் தலைமை நிர்வாகியான கார்லி ஃபாரோ கூறிய அறிக்கையில் ” டிரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸின் மருத்துவமனை புதுப்பிப்பு மற்றும் விரிவாக்க திட்டங்கள், தலைமுறைகளுக்கு உயர்தரமான மருத்துவ வசதிகள், விதிவிலக்கான கவனிப்பு மற்றும் நவீன மருத்துவ இயந்திரங்கள் மூலம் சிறந்த சிகிச்சை போன்றவற்றை உறுதி செய்யும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் 350க்கும் மேற்பட்ட புதிய படுக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சை அறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒன்ராறியோவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மருத்துவமனை புதுப்பித்தல் திட்டத்தை இந்த முதலீடு பிரதிபலிப்பதாக போர்ட் ஒரு அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.