தடுப்பூசி போடாத ஊழியர்கள் ஊதியமில்லா விடுப்பில் வைக்கப்படுவார்கள் – ஒண்டாரியோ மாகாணம்

corona
Canada Corona Vaccine

ஒன்டாரியோ மாகாணத்தில் சுகாதார பணியாளர்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகளை நீண்ட கால பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போடவில்லை எனில் எதிர்வரும் வாரங்களில் அவர்களுக்கு பணி இல்லாமல் போகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால பராமரிப்பு மற்றும் மருத்துவமனைகளின் பிரதிநிதி ,குறைந்த ஊதியம், அதிகமான வேலை நிலைகளால் ஊழியர்களின் பிரச்சனை மற்றும் பணியிடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி மருந்துகள் கட்டாயம் போன்ற அறிவிப்புகள் குறித்து பேசினார்.

SEIU Healthcare -ன் சார்லின் ஸ்டீவர்ட் நேர்காணலின் போது ” covid-19 தடுப்பூசி கட்டாயம் பணியாளர்கள் நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ” என்று கூறினார். நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் பணியாளர்கள் தடுப்பூசி போட வேண்டும். இல்லையெனில் தங்களது வேலைகளை இழக்கக்கூடும் என்று ஒன்டாரியோ மாகாணம் அறிவுறுத்தியுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றின் தாக்கத்தையும் அச்சுறுத்திவரும் டெல்டா மாறுபாட்டின் அபாயத்தையும் காரணமாக காட்டி தடுப்பூசி போடாத ஊழியர்களை பணியிடங்களில் இருந்து விடுப்பில் வைக்க தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை கட்டாயம் ஆக்குவதில் ஒன்டாரியோ மாகாணம் கியூபெக்கில் வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

வேலைச் சுமைகளை சமாளிக்க பணியிடங்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடாத ஊழியர்களை வேலையில் ஈடுபடுத்தி உள்ளன. நோய்த்தொற்றின் தாக்கத்தை அறிந்து ஊழியர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.