ஒன்டாரியோ உயர்நீதிமன்றம் Givesendgo-ன் போராட்டக்காரர்களின் நன்கொடைகளை முடக்கியது – போராட்டத்திற்கு குவிந்த மில்லியன் டாலர்கள்

protest

தலைநகர் ஒட்டாவாவில் Covid-19 ஆணைகளுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் Freedom Convoy போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒட்டாவா மற்றும் பல எல்லைகளில் Covid-19 கட்டுப்பாடுகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆன்லைன் வழியாக நிதி திரட்டி வருகின்றனர்

.ஆன்லைன் நிதி திரட்டும் தளமான Givesendgo மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் வழங்கப்பட்டது. ஆன்லைன் மூலம் திரட்டப்பட்ட டாலர்களுக்கான அணுகலை தடை செய்வதற்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இணையதளத்தின் Freedom convoy 2022 மற்றும் Adopt-a-trucker ஆகிய இரண்டு பக்கங்களையும் அவற்றின் மூலம் வழங்கப்படும் நிதிகளையும் விநியோகிப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணம் உயர் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவை பெற்று உள்ளது என்று முதல்வர் டக் போர்டின் செய்தி தொடர்பாளர் கூறினார்

போராட்டத்திற்கு ஆரம்பத்தில் Gofundme மூலம் $10 மில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டது. ஆர்ப்பாட்டம் அமைதியானதாக இருக்கும் என்று முதலில் எதிர்பார்த்ததாக தளம் கூறியது .ஆனால் கடுமையான ஆக்கிரமிப்பாக மாறிவிட்டதாக உள்ளூர் தலைவர்கள் மற்றும் காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து அதன் ஆதரவை விலக்கிக் கொண்டனர்.

Convoy செயலாளர்கள் கிறிஸ்தவ நிதி திரட்டும் தளமான Givesendgo தளத்தில் விரைவாக புதிய பிரச்சாரங்களை ஆரம்பித்தனர். Freedom convoy $8.4 மில்லியன் டாலர்களையும் adopt-a-trucker $686000க்கும் அதிகமான டாலர்களையும் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்