ஒன்டாரியோ மாகாணத்தில் எடுக்கப்பட்ட covid-19 பரிசோதனைகள்

AstraZeneca vaccine
Ontario premier says new age recommendations for AstraZeneca vaccine

குறைந்து வரும் covid-19:
கனடா முழுவதும் தடுப்பூசி மருந்துகள் விரைவாக விநியோகிக்கப்பட்டு வருவதால் நாளுக்கு நாள் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைவதைக் தொடர்ந்து தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்ராரியோ மாகாணத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 200-க்கும் குறைவாக பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகாணங்களில் பாதிப்பு எண்ணிக்கை:
ஞாயிற்றுக்கிழமை மட்டும் covid-19 வைரஸ் தொற்றினால் ஆறு பேர் ஒன்டாரியோ மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர். 177 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதாக பதிவாகியுள்ளது.நேற்று 14,805 பேருக்கு covid-19 பரிசோதனைகள் எடுக்கப்பட்டது.

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் நாளொன்றுக்கு பதிவாகியுள்ள covid-19 வைரஸ் தொற்றின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு
டோரன்டோ – 22
பீல் – 12
ஹாமில்டன் – 16
வாட்டர்லூ – 32
கிரே ப்ரூஸ் – 33

 

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் கட்டுப்பாட்டு தளர்வுகள்

Covid-19 தொற்று நிலவரம் :
எடுக்கப்பட்ட covid – 19 பரிசோதனைகளின் முடிவுகள் ஒரு சதவீதம் நேர்மறையானதாகும்.சென்ற வாரம் ஐந்தாயிரம் covid-19 பரிசோதனைகள் எடுக்கப்பட்டதில் 0.9% நேர்மறையான முடிவுகள் தரப்பட்டது. இந்த வாரம் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஒன்டாரியோ மாகாணத்தில் இதுவரை 9,294 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 150 பேர் சிகிச்சை பெற்று வருவதாக ஒன்டாரியோ மாகாணத்தின் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.