ஒன்ராறியோவின் covid-19 வழக்குகள் வீழ்ச்சி – கிறிஸ்டினா எலியட்

Toronto Doctors

ஒன்ராரியோ மாகாணத்தில் கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட covid-19 தடுப்பூசி மருந்துகள் தகுதியுள்ள கனடிய மக்களுக்கு விரைவாக வினியோகம் செய்யப்படுகின்றன. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் covid-19 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகிறது.

ஒன்டாரியோ மகாணத்தில் covid-19 வழக்குகள் கணிசமாக குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. Covid-19 வைரஸ் தொற்றின் 7 நாள் சராசரி தொடர்ச்சியாக வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. ஒண்டாரியோ மாகாணத்தில் 800க்கும் குறைவான covid-19 வழக்குகள் பதிவாகின்றன.

கடந்த சனிக்கிழமை 857 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை 784 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாகாணத்தின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்பொழுது வரை ஒன்ராரியோ மாகாணத்தில் 78% பேர் covid-19 தடுப்பூசி மருந்துகளின் இரண்டு அளவுகளையும் பெற்று உள்ளனர். குறைந்த பட்சம் முதல் கட்ட தடுப்பூசி மருந்து பெற்றுக்கொண்டவர்கள் 84 சதவீதத்தினர் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய covid-19 வழக்குகளில் சுமார் 140 வழக்குகள் 12 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் என்று கூறப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்கு தகுதி பெறாத குழந்தைகளுக்கு covid-19 வைரஸ் தொற்று ஏற்படுவதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒன்ராரியோ மாகாணத்தில் சுகாதார அமைச்சர் covid-19 வழக்குகளின் புள்ளி விவரங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டார். கடந்த வாரத்திலிருந்து ஒன்டாரியோ மாகாணத்தின் covid-19 வழக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தினசரி பதிவாகும் கோவிட் 19 வழக்குகள் கணிசமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.