கனடாவில் covid-19 வைரசால் இவ்வளவு உயிரிழப்புகளா? – அதிர்ச்சித் தகவல்

vaccine passport poll

கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Covid-19 தடுப்பூசி மருந்துகள் அனைத்து மாகாணங்களிலும் விரைவாக விநியோகிக்கப்படுகின்றன. ஒன்டாரியோ மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 715 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 6 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Covid-19 வழக்கு பதிவுகள் கடந்த சனிக்கிழமை முதல் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் மாறாமல் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு covid-19 வழக்குகளின் ஏழு நாள் சராசரி 732 ஆக இருந்தது. இது நேற்று 719 ஆகக்குறைந்தது. தற்பொழுது ஏழு நாள் வழக்குகளின் சராசரி 709 ஆக பதிவாகியுள்ளது.

ஒன்ராரியோ மாகாணத்தில் வெள்ளிக்கிழமை 795 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் சனிக்கிழமை புதிதாக 821 covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய covid-19 வழக்குகளில் 440 பேர் covid-19 தடுப்பூசி மருந்து போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் 44 பேர் முதல் தவணை தடுப்பூசி மருந்துகள் மட்டும் போட்டுக் கொண்டவர்கள் என்றும் அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.56 பேரின் தடுப்பூசி நிலைகள் அறியப்படவில்லை. இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்று முழுமையாக தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் 175 பேர் என்று தகவல்கள் கூறுகின்றன.

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் குறைந்த பட்சம் முதல் கட்ட தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்டவர்கள் 85% என்று சுகாதார அமைச்சர் கிரிஸ்டின் எலியட் கூறினார். கனடா முழுவதும் இன்று  6396 covid-19 வழக்குகள் செயலில் உள்ளன. இதுவரை covid-19 வைரஸ் தொற்றினால் 9653 பேர் உயிரிழந்துள்ளனர்.