ஒன்றாரியோ மாகாணத்தில் அந்த தினத்தில் மட்டும் யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை!

Ontario
Ontario Covid Vaccination

ஒன்றாரியோ முதன் முதலாக தடுப்பூசி போடும் பணியை ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதுவரை 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

இருப்பினும், வார இறுதியில், விடுமுறை நாட்களில் ஒன்றாரியோவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

ஒன்றாரியோ கொரோனா தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் ஜெனரல் ரிக் ஹில்லியர் கூறுகையில், நான் அதற்குப் பொறுப்பேற்கிறேன், நிலையை நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோம் என்றார்.

ஜெனரல் ஹில்லியர் அவர்கள் தடுப்பூசி பட்டியலை நிறுத்துவதற்கான காரணம், நீண்ட கால பராமரிப்பில் பணியாற்றி வந்த முன்னணி தொழிலாளர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்கும் நோக்கில் விடுப்பு அளித்ததாக தெரிவித்தார்.

சட்டரீதியான விடுமுறை நாட்களில் தடுப்பூசி கிளினிக்குகளுக்கு தொழிலாளர்களை அழைப்பது நியாயமற்றது என்று கூறினார்.

உயிரியலாளரான ரியான் இம்க்ரண்ட் உருவாக்கிய ஒரு விளக்கப்படம், மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடும்போது தடுப்பூசி போடும் பணியில் ஒன்றாரியோ எவ்வளவு பின் தங்கி உள்ளது என்பதை விளக்குகிறது.

ஒன்றாரியோவில் செவ்வாய்க்கிழமை வரை 19 தடுப்பூசி போடும் இடங்கள் திறக்கப்பட உள்ளதாகவும், அடுத்த வாரம் மேலும் இரண்டு இடங்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் ஹில்லியர் கூறினார்.

இதையும் படியுங்க: ஆயிரக்கணக்கான மின்விசிறிகளை திரும்ப பெறும் ஹெல்த் கனடா! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.