ஒன்ராறியோவில் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு என்ன காரணம்? பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!

ஒன்ராறியோவில் செவ்வாயன்று 446 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இது கடந்த திங்கள்கிழமை பதிவான 404 புதிய பாதிப்புகளை விட அதிகமாகும்.

17 பேர் இறந்துள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பதிவான 2,293 இறப்புகளில் 1,465 பேர் நீண்டகால பராமரிப்பில் இருந்தவர்கள் என்று  ஒன்ராறியோ பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாகாணத்தில் மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின்  எண்ணிக்கை இப்போது 28,709 ஆக உள்ளது. இதில் 78.3 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்தம் 15,244 சோதனைகள் செய்யப்பட்டன. இருந்தாலும் ஒரு நாளைக்கு செய்யக்கூடிய அதிகபட்ச அளவான 16,000 என்ற இலக்கை இன்னும் அடையவில்லை.

பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், ஒன்ராறியோ தனது அவசரகால நிலையை ஜூன் 30 வரை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.