புதிதாக covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் ஒன்ராறியோவில் பதிவு

COLCHICINE
CANADIAN ANTI-INFLAMMATORY DRUG COLCHICINE REDUCES COVID-19 RELATED COMPLICATIONS, DEATH

ஒன்டாரியோ மாகாணத்தில் பதிவாகி வரும் Covid-19 வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக பதிவாகும் Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கைகளை விட தற்பொழுது குறைவான எண்ணிக்கையில் தொற்றுகள் பதிவாகின்றன. மாகாணத்தில் சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் Covid-19 வைரஸ் தொற்றினால் மூன்று பேர் மரணித்துள்ளனர்.

மாகாணத்தில் 170 Covid-19 வைரஸ் தொற்றுக்கள் இன்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறினர். கடந்த வெள்ளிக்கிழமை வைரஸ் தொற்று எண்ணிக்கை 196 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் பதிவாகிய வைரஸ் தொற்று எண்ணிக்கை 176 ஆகும்.

இந்த வாரத்திற்கான ஏழு நாள் சராசரி covid-19 வைரஸ் தொற்றின் எண்ணிக்கை 159 என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்ராரியோ மாகாணத்தில் வியாழனன்று 185 பேரும், புதன்கிழமை 135 பேரும், செவ்வாய்க்கிழமை அன்று 127 பேரும் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பல வாரங்களாக வைரஸ் தொற்று எண்ணிக்கையில் கணிசமாக குறைந்ததை காணமுடிந்தது. தற்பொழுது covid-19 எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. தற்பொழுது ஒன்ராரியோ மாகாணத்தில் 1424 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் ஒன்டாரியோ மாகாணத்தில் ஒரு நாளில் மட்டும் 150 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து பின்பு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகாணத்திலுள்ள ஆய்வகங்கள் அனைத்தும் நேற்று 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட covid-19 பரிசோதனைகளை நடத்தியுள்ளது. இதுவரை ஒன்ராரியோ மாகாணத்தில் 9 ஆயிரத்து 311 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் மரணித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.