மருந்துகள் வாங்க வேண்டுமா? கனடா முழுக்க பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு!

கனடாவில் மருந்துகள் வாங்க விதிக்கப்பட்டிருந்த வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே பல மாகாணங்கள் விதிகளை தளர்த்தியுள்ள நிலையில் தற்போது, ஒன்றாரியோவும் இந்த முடிவை கையில் எடுத்துள்ளது.

முன்னதாக பெரும்பாலான கனேடியர்கள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்க சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அவர்கள் கேட்கும் அளவுக்கு மருந்துகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

ஊரடங்கின் காரணமாக, ஒரு நபர் அதிகபட்சமாக 30 நாட்கள் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு மட்டுமே, மருந்துகள் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இனி 100 நாட்களுக்கான மருந்துகளை கூட வாங்கிக்கொள்ள முடியும். பாதிப்பின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு மாகாணமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஒன்ராறியோவும் இப்பட்டியலில் இணைந்துள்ளது.

 

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms