ஒன்ராறியோவில் covid-19 கட்டுப்பாடுகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை – திணறி வரும் மருத்துவமனைகள்!

British Columbia
British Columbia Canada

ஒன்டாரியோ மாகாணம் covid-19 கட்டுப்பாடுகளை குறைப்பதற்கும் மேலும் வைரஸ் தொற்று ஊரடங்கு குறித்த மேற்படியான திட்டங்கள் எதுவும் தற்போதைய நிலையில் ஆலோசிக்க படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை விதியை கடை பிடிக்காது வெளியே சுற்றித் திரிந்தால் covid-19 பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளனர்.

322 பக்கங்கள் கொண்ட சுற்றறிக்கை ஒன்றினை ஒன்டாரியோ மாகாணத்தின் நீண்ட கால பராமரிப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரம் வெளியிட்டுள்ளது.

Covid-19 எவ்வாறு பரவியது மற்றும் ஏன் பாதுகாப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பின்னர் பிறருக்கு பரவுகிறது என்ற விபரங்கள் குறித்த விசாரணைகளை நடத்தி அது குறித்த பதிவுகளை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகாணங்கள் வைரஸ் தொற்று குறித்த சுற்றறிக்கையை தயார் செய்வதில் மிகவும் மோசமாக செயல்படுவதாக நீண்ட கால பராமரிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அபாயகரமான நிலையில் அனைவரும் விவேகமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முன்கள பணியாளர்களுக்கு இடைவிடாது தொடர்ந்து பணி இருப்பதால் அவர்களுக்கும் வைரஸ் தொற்று எளிதில் பரவி விடுவதாக தகவல்கள் கூறுகின்றன.

எனவே மக்கள் அனைவரும் தன் நலன் காத்துக்கொள்ள கவனமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட கால பராமரிப்பு மையங்கள் அனைத்தும் தற்பொழுது covid-19 வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் நிரம்பி வருகிறது.

மருத்துவர் மற்றும் மருத்துவமனைகள் அனைத்தும் திணறி வருவதாக தெரிவித்துள்ளனர்.