கனடாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு கனடிய அரசாங்கம் வழிகாட்டுதல் – ஓமிக்ரோன் மாறுபாட்டின் தீவிரம்

trudeau travel limits omicron

Covid-19 வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரோன் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் கனடிய அரசாங்கம் நாட்டிற்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரித்துள்ளது. கனடாவிற்கு வெளியே உள்ள அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிரான திட்டங்களை கனடா மீட்டெடுக்கும் என்று கூறப்படுகிறது.

கனடா முழுவதும் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளின் விகிதங்கள் அதிகரித்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதியிலிருந்து முழுமையாக தடுப்பூசி பெற்ற அயல்நாட்டு பயணிகள் கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது ஓமிக்ரோன் மாறுபாட்டின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசாங்கம் பயண கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஓமிக்ரோன் மாறுபாடு நாட்டில் மீண்டும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. நாட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மற்றொரு தொட்டு அலையைப் பற்றி கவலைப்பட வேண்டும். ஓமிக்ரோன் மாறுபாடு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. ” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேட்டியில் கூறினார்.

கனடாவில் விடுமுறை காலத்தை ஓமிக்ரோன் மாறுபாடு சீர்குலைப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பிரதேசங்கள் மற்றும் மாகாணங்களின் முதல்வர்களுடன் அவசர மாநாட்டில் கூறினார்.

குழந்தைகளுக்கான covid-19 தடுப்பூசி மருந்துகள் ,உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பூஸ்டர் தடுப்பூசி மருந்துகள் போன்றவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் தவறாமல் பெற்றுக் கொள்வதன் மூலம் கனடா இந்த குளிர்காலத்தில் சிறந்த கோடை காலத்தை உருவாக்கும் என்று பிரதமர் கூறினார்