கனடாவில் வீரியம் மிக்க Omicron மாறுபாட்டின் தாக்கம் – இரண்டு நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்

omicron in canada WHO warning

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இரண்டு நபர்களுக்கு Omicron covid-19 மாறுபாடு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தொற்று ஏற்பட்ட இரண்டு நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். சமீபத்தில் இருவரும் நைஜீரியாவுக்கு சென்று வந்துள்ளதால் அவர்களுடன் வைரஸ் தொற்று பரவுவதற்கு சாத்தியமான தொடர்புகள் உடன் இருந்தவர்களை பொது சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக கூட்டாட்சி மற்றும் ஒன்றாரியோ மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராரியோ மாகாணத்தில் Covid-19 கண்காணிப்புகளில் வீரியம் மிக்க Omicron Covid-19 தொற்று இரண்டு நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார அமைப்பின் மூலமாக சுகாதார அமைச்சர் யவ்ஸ்க்கு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டு வழக்குகளும் தலைநகர் ஒட்டாவாவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு மற்றும் சோதனை தொடர்வதால் Omicron வழக்குகள் கனடாவின் பிற மாகாணங்களில் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Covid தடுப்பூசி மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கான தாக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் உள்ளதா என்று கண்டறிவதற்கு மேலும் பல வாரங்கள் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு தென்னாப்பிரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கான பயணத்தை கட்டுப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. “கவலைக்குரிய மாறுபாடு ” என்று Omicron -ஐ உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கடந்த வெள்ளிக்கிழமை 7 தென் ஆப்பிரிக்க நாடுகளின் பயணத்திற்கு கனேடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.