ஓமிக்ரோன் டெல்டாவை போல அல்ல – ஒன்டாரியோ மாகாணத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்

ford

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் covid-19 காரணமாக அதிகரிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்வரும் பிப்ரவரி மாதம் படிப்படியாக நீக்குவதற்கு மாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றிற்கான கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்பதை குறிப்பிடவில்லை.மேலும் மார்ச் மாதம் கட்டுப்பாடுகளை நீக்கி முழுமையாக திறப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கவலைக்குரிய மாறுபாடான ஓமிக்ரோன் மற்றும் Covid-19 வைரஸ் தொற்று வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 5ஆம் தேதி மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்தது.

குளிர்கால இடைவேளையை தொடர்ந்து நேரடி கற்றலை ரத்து செய்து மெய்நிகர் கற்றல் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. மாகாண அரசாங்கத்தின் தற்போதைய கட்டுப்பாடுகள் ஜனவரி 26 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ஜனவரி 31ஆம் தேதி முதல் உணவகங்கள் 50% திறனில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் பொது சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அறிவித்தார். Covid-19 தரவுகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்று கூறினார். மருத்துவமனைகளில் கிடைத்த தகவல்களின்படி ஓமிக்ரோன் டெல்டாவை போல கடுமையானது அல்ல என்று உறுதிப்படுத்த பட்டுள்ளதாகவும் கூறினார்.