கனடா நாட்டிற்கான பதக்கங்களை வென்று நாடு திரும்பியுள்ள வீராங்கனைகள்

Hemb
Hemb Ban Canada

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் கனடாவிலிருந்து பல்வேறு விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கனடாவின் அணியில் நான்கு பேர் பதக்கங்கள் பெற்றுள்ளனர். பதக்கங்களைப் பெற்றவர்கள் கனடாவிற்கு திரும்பியுள்ளனர்.

விளையாட்டு வீரர்களான மேக் நீல், கெயில் மாஸ் , ரக் மற்றும் கைலா சான்செஸ் ஆகியோர் உலகம் முழுவதும் covid-19 தீவிரமாக பரவி வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நோக்கிய பயணங்கள் குறித்து புதன்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

மகளிர்களுக்கான 100 மீட்டர் பந்தயத்தில் வென்று கனடா நாட்டிற்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்ற மேக் நீல் தான் அடைந்த வெற்றியை பிரதிபலித்தார்.” கனடா நாட்டிற்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதோடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது ” என்று அவர் கூறினார்.

உலகச் சாம்பியன்ஷிப் மற்றும் ரியோவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றதால் மிகுந்த தன்னம்பிக்கையும் வெற்றியை அடைவதற்கான வழிமுறைகளையும் எளிதாக பின்பற்ற முடிந்தது என்று அவர் கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபெற்று 4 பதக்கங்களை பெற்று கனடாவிற்கு மீண்டும் திரும்பியது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாக வீராங்கனைகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

ஒலிம்பிக் போட்டியில் 4×100 மீட்டர் ரிலேயில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 4×100 மீட்டர் மெட்லி ரிலேவில் மகளிர் அணிகள் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். கனடாவிற்கான பதக்கங்களை மகளிர் அணிகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடி பெற்று வந்தது கனடாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.