எப்போதும் இல்லாத அளவிற்கு அலுவலக தேசிய காலியிட விகிதங்கள் உயர்வு – CBRE Group

vacant
toronto cbre

1994ஆம் ஆண்டிலிருந்து தேசிய அலுவலக காலியிடங்களின் விகிதம் 15.7 சதவீதம் மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளதாக CBRE group inc கூறியுள்ளது. தற்பொழுது நாடு முழுவதும் covid-19 வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணிகளை செய்கிறார்கள்.

நாட்டில் நான்காவது அலை உருவெடுக்கும் என்று எதிர்பார்த்தது பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வருவதை குறைத்து விட்டது. இது கடந்த காலாண்டில் அலுவலக காலியிடங்களின் விகிதத்தை 15.3% சதவீதத்திலிருந்து அதிகரிக்கச் செய்தது என்று வணிகம் தொடர்பான ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியது.

கனடிய தொழில்நுட்பத் துறைகளின் தேவையால் தூண்டப்பட்டு குத்தகை நடவடிக்கைகள் பெருகி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கனடிய முக்கிய சந்தைகளில் பத்தில் 4 சந்தைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கல்கேரி நகரில் 30.1% சதவீதம், டொரண்டோவில் 13.7% சதவீதம் மற்றும் வான்கவர் நகரில் 7.4% சதவீதம் என அலுவலக காலியிடங்களின் விகிதம் மாறுபடுகிறது.தொழில் துறைகளில் காலியிடங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் விநியோகங்களின் தேவைகள் இதுவரை இல்லாத அளவிற்கு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

லண்டன், டொரன்டோ, வாட்டர்லூ மற்றும் வான்கூவர் சந்தைகளில் கடந்த காலாண்டில் அலுவலக காலியிடங்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளன. தொழில்துறை பணியிடத்திற்கான தேசிய காலியிட விகிதம் காலாண்டில் 2 சதவீதமாக இருந்தது என்று CBRE கூறுகிறது.

தொழில்நுட்பத் துறை போன்ற சில துறைகளில் ஊழியர்கள் தொலைதூர பணியை மேற்கொள்ள முடியும் என்பதால் ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்தனர் . இவ்வாறு CBRE தேசிய காலியிட விகிதங்கள் பற்றிய தகவல்களை அறிவித்து உள்ளது