வடக்கு ஒன்டாரியோவில் அவசரகால நிலை -ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

fire

காட்டுத்தீயால் மக்கள் வெளியேற்றம் :

கனடாவின் வடக்கு ஒன்டாரியோ பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அதிக அளவிலான பகுதிகள் பாதிப்படைந்துள்ளன.காட்டுத்தீ தீவிரமாக பரவி வந்ததை அடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை அப்பகுதியில் இருந்து கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியதாக அரசாங்கம் திங்கட்கிழமை தெரிவித்தது. இந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ கடந்த 10 ஆண்டு காட்டுத்தீ சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இந்த ஆண்டு 902 காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. வடமேற்கு பகுதியில் பெரும்பாலான காட்டு தீ ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீயினால் இதுவரை 5,20,000 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து உள்ளன.

வடக்கு ஒன்ராறியோவில் உள்ள 49 முதன்மை நாடுகளையும், NDP ஐயும் பிரதிபலிக்கும் Nishnawbe Ashki Nation ,காட்டுத்தீ காரணமாக அவசரகால நிலையை அறிவிக்குமாறு மாகாண அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அவசரகால நிலையை அறிவிப்பதற்கான சட்டபூர்வமான நிபந்தனைகளை தற்பொழுது உள்ள நிலைமை பூர்த்தி செய்யவில்லை. காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான போதுமான வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று மாகாண அரசாங்கம் கூறியது.

மழைப்பொழிவு தேவை

எதிர்வரும் புதன்கிழமை முதல்வர் டக் போர்ட் தண்டர் பே மையத்தை பார்வையிட உள்ளதாக தெரிவித்தார். காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் தீயணைப்பு சேவை அமைப்பின் அறிவுரையின்படி 5000 கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட வேண்டியிருக்கும் என்று மாகாண அரசாங்கம் தெரிவித்தது.

வானிலை முன்னறிவிப்பு சிறிது மழை பொழியும் என்று கூறியது. தற்பொழுது காட்டுத்தீயால் எரிந்து ஏற்படும் அபாயத்தை கட்டுப்படுத்த அதிகமான மழைப்பொழிவு தேவைப்படும் என்று கூறியது.