கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில் முறைகேடு! வெளியான அதிர்ச்சி தகவல்!

Virus Outbreak
FILE - In this March 16, 2020, file photo, Neal Browning receives a shot in the first-stage safety study of a potential vaccine for COVID-19

கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் குறிப்பிட்ட வயதினருக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பகுதியிலும் முன்னுரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி மருந்துகள் முதலில் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் கனடாவிலுள்ள ஆமில்டன் பகுதியில் வைரஸ் தடுப்பூசி மருந்துகள் குழுக்களில் உள்ள முன்னுரிமை இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.

நடமாடும் தடுப்பூசி மையத்தில் இவ்வாறு வழங்கப்பட்டதால் மூன்று பணியாளர்கள் முந்தைய தினம் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நடமாடும் தடுப்பூசி மையத்தில் பணிபுரியும் ஏனைய பணியாளர்களால் முன்வைக்கப்பட்டது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் ஹாமில்டன் பொது சுகாதார நலத் துறை குற்றச்சாட்டை அடுத்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவலை வெளியிட்டனர்.

கனேடிய மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி! விரைவில் செயல்பாட்டுக்கு வரும் திட்டம்!

சுமார் பதினைந்து பேர் முன்னுரிமை பட்டியலில் இல்லாதவர்கள் என்றும் அவர்களுக்கு தடுப்பூசி மருந்துகள் வினியோகிக்கப்பட்டது என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹேமில்டன் பகுதியில் ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு தற்போது தடுப்பூசி மருந்துகள் வினியோகிக்க படக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தடுப்பூசி மருந்துகள் வினியோகிக்கப்பட்டது குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

ஹாமில்டன் பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.