புத்தாண்டிற்கு வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்தது மிசிசாகா நகரம் – கொண்டாட்ட சதுக்கத்தில் புத்தாண்டு நிகழ்வுகள்

newyear missisauga

Covid-19 மற்றும் அச்சுறுத்தி வரும் ஓமிக்ரோன் மாறுபாட்டின் நான்காவது அலைக்கு மத்தியில் மிசிசாகா நகரம் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது.எதிர்வரும் புத்தாண்டு ஈவ் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் வைரஸ் தொற்று காரணமாக மிசிசாகா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாட்ட சதுக்கத்தில் மிசிசாகா நகரம் முழு நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவு பிரம்மாண்டமான வாணவேடிக்கையுடன் முடிவடையும். தற்போது வீரியமிக்க ஓமிக்ரோன் மாறுபாடு அச்சுறுத்தி வருவதால் சீரமைக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்வதாக மிசிசாகா நகரம் செவ்வாய்க்கிழமை காலை உறுதிப்படுத்தியது.

கடந்த புத்தாண்டில் covid-19 வைரஸ் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கை காட்சிகளை மிசிசாகா நகரம் ரத்து செய்திருந்தது. தற்போது இது இரண்டாவது ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கொண்டாட்ட சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளின்போது அதிகளவில் மக்கள் ஒன்று கூடுவார்கள். Covid-19 வைரஸ் தொற்று பரவி வருகின்ற சூழ்நிலையில் கொண்டாட்டத்தை விட உடல்நலனை பாதுகாத்துக் கொள்வது சிறந்தது ஆகும்.

ஸ்கேட்டிங் வளையம் கொண்டாட்ட சதுக்கத்தில் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என்று மிசிசாகா நகரம் கூறுகிறது. டொரண்டோ நகரம் பத்து நிமிட வானவேடிக்கை நிகழ்வுகளுக்கான திட்டங்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.